
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ஒரு நாள் DMK நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து, 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் பயிரை செய்துள்ளார்கள். தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு. டெல்லியில் ஆள்கிறது பிஜேபி அரசு. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு. ஒரு உறுப்பினர் கூட எழுந்து கேள்வி கேட்டதில்லை…. சும்மா வாய்சாவடால் விடுகிறார்கள்.
நாங்களும் கேட்டோம்? எப்ப கேட்ட ? எந்த தேதியில் கேட்ட ? எந்த தேதியில் ஆர்ப்பாட்டம் செஞ்ச ? சொல்லு… மணிப்பூருக்கு போய் ஆர்ப்பாட்டம் பண்ற… பாராளுமன்றத்தில் இருந்து மணிப்பூருக்கு நீதி வழங்கு… மணிப்பூருக்கு நீதி வழங்கு என இவுங்க பாப்பா, MP-க்கள்ல்லாம் போனாங்க. இங்க இருக்கின்ற தஞ்சாவூர்காரனுக்கு தண்ணி வாங்கி கொடுங்க ? மணிப்பூருக்கு அவன் பாத்துக்குவான்.
நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம். இப்ப போயிட்டாரு… இஸ்ரேலுக்கு போயிட்டாரு… இங்க இருக்கிற வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழிச்சவனை இதுவரைக்கும் பிடிக்க முடியல, வக்கில்ல, துப்பு இல்லை… இந்த முதலமைச்சருக்கு…. இஸ்ரேல்ல இருக்கவங்கள போய் காப்பாற்ற போறாராம். உக்கிரேன்ல இருக்கின்றவனுங்களை காப்பாத்துறாராம் என சரமாரியாக விமர்சித்தார்.