அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் முன்னாள் அமைச்சரையும் அது விட்டுவைக்கவில்லை.