இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!
Related Posts
“சும்மா சிலிர்க்க வைக்குது!”… மைக் ஜாக்சன் ஸ்டைலில் நடனமாடும் பறவை… காதலியை ஈர்க்க விசித்திரப் பறவையின் வித்தை… வைரல் வீடியோ..!!!
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ‘மூன்வாக்’ நடனத்தை மனிதர்கள் பலரும் பார்த்திருப்போம். ஆனால், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு உட்பட்ட அடர்ந்த உஷ்ணமண்டல காடுகளில் வசிக்கும் ‘ரெட் கேப்ட் மனாக்கின்’…
Read moreஅட என்ன சொல்றீங்க.. இதயத்திற்குள் ஒரு மூளையா…? ஆமாங்க தலையில் மட்டுமல்ல இல்ல இதயத்தில் கூட இருக்குதாம்… மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு… அசத்திய விஞ்ஞானிகள்…!!
மனித உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்திற்குள், மூளையைப் போன்றே செயல்படக்கூடிய ஒரு நுண்ணிய நரம்பு மண்டலம் அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். “இதயத்தின் சிறிய மூளை” என்று அழைக்கப்படும் இந்த நரம்பு வலையமைப்பு, மூளையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே பல முக்கிய…
Read more