ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதன் மூலமாக ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து உக்ரைன் போராடி வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 பில்லியன் டாலர் அளவு அமெரிக்கா உக்ரைனுக்காக செலவிட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து போர் நடைபெறுவதால் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.