இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.