லிபியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நஜ்லா அல்-மங்குஷ். இவர் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இரண்டு மந்திரிகளின் சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றது என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் பெண் மந்திரியான நஜ்லாவை பணியிடை நீக்கம் செய்து பிரதமர் அப்துல் ஹமீது உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் நீதி மந்திரி தலைமையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.