கட்டிடத்தின் பால்கனிகளை துணிகளை உலர்த்த போட்டாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா நகராட்சி கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கட்டிடத்தின் அழகுக்கு ஒத்து வராத வகையில் பால்கனிகளில் ஹங்கர் அல்லது பிற பொருட்களை வைக்க வேண்டாம் என்றும் அதனைப் போலவே 20 நாட்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத வாகனத்தை சாலையில் நிறுத்தி வைத்தால் 500 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்து.