நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சைக் 16 என்ற விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியது.

இந்த விண்கலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் மூலம் லேசர் தகவல்களை ஆராய்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பூமிக்கு 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் ஒன்று வந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சூரியனுக்கு பூமிக்கும் இடையேயான தூரத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும். இவ்வளவு தூரத்தில் இருந்து அனுப்பப்பட்ட சிக்னல் பூமிக்கு வெறும் 8 நிமிடத்தில் வந்துள்ளது. மேலும் இதன் மூலம் தகவல் தொடர்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றும், ஏலியன்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.