தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பவானி ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அமீர் மற்றும் பவானி ஆகியோர் காதலிக்க தொடங்கிய நிலையில் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் அமீர் மற்றும் பவானி ரெட்டி துணிவு திரைப்படத்தில் 2 நிமிஷம் காட்சியில் வந்துவிட்டு ஓவர் பில்டப் செய்ததாக நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்தனர். இந்த ட்ரோல்களுக்கு தற்போது அமீர் மற்றும் பவானி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளார்கள். அதாவது அஜித் படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தவுடன் நாங்கள் படத்தில் என்ன ரோல் கதை என்ன என்று கூட கேட்கவில்லை உடனே ஒப்புக்கொண்டோம். நாங்கள் படத்தில் சில மணி நேர காட்சியில் மட்டும் தோன்றினாலும் அஜித் சார் எங்கள் இருவரையும் அழைத்து 3 மணி நேரம் அட்வைஸ் கொடுத்தார். மேலும் இது தான் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நல்ல அனுபவம் என்று கூறியுள்ளனர்.