
நீலகிரியில் இருக்கும் குழந்தை இல்லங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கின்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக துறை அலுவலர்களுடனான குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, நீலகிரியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த குழு கிராம வட்டார நகராட்சி அளவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கவும் அனைத்து துறை அலுவலர்கள் தேர்தல் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். இல்லத்தை நிர்வகிப்பவர்கள் இல்லம் சார்ந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
மேலும் நீலகிரி குளிர் பிரதேசமாக இருப்பதால் அனைத்து இல்லங்களிலும் குழந்தைகளுக்கு வெந்நீர் சாதனம் வைத்திருக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகள் துறைவாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.