அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் போர்ட் ஓக்லெதோர்ப் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பு ஒன்றில், 82 வயது மூதாட்டி ஓட்டி வந்த போர்டு எக்ஸ்ப்ளோரர் ரக கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
பிரேக்கிற்கு பதிலாக தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை அந்தப் பெண் மிதித்ததால் கார் அதிவேகத்தில் சென்று முன்னால் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியதுடன், ஒரு காரின் கூரை மீது ஏறி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் சிக்கிய கார், லாரிகள் பலத்த சேதமடைந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
An 83-year-old driver mistakenly pressed the gas instead of the brake, setting off a massive seven-car crash that injured four people in Fort Oglethorpe, GA. pic.twitter.com/Ek8O8PMDJb
— liveXclique (@liveXclique) January 17, 2026
இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்ய ஜார்ஜியா மாநிலக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
