உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் பீம்சென் திரிபாதி தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார்.

அங்குள்ள ஒன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ஒருவர் அபாயத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அந்தப் பாதையில் அதிவேக விரைவு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதைக் கண்ட காவலர் பீம்சென், நொடிப் பொழுதும் தாமதிக்காமல் தண்டவாளத்தை நோக்கி ஓடிச் சென்று, அந்தப் பயணியைக் கைப்பிடித்து நடைமேடைக்கு இழுத்தார்.

அவர் அந்தப் பயணியை மீட்ட அடுத்த எட்டாவது வினாடியில், அந்த அதிவேக இரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது. சில நொடிகள் தாமதித்திருந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>

 

காவலரின் துணிச்சலையும், சமயோசித புத்தியையும் பாராட்டிப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.