தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகரன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அவர் அந்த பேட்டியின் போது விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்து சொன்னார். அதாவது எப்போதோ சமரசமாகி கையெழுத்தான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியலாக்குவதாக குறிப்பிட்டார். அதன்பிறகு விஜய் எதற்காக 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்ற கேள்விக்கு கரூர் சம்பவம் தான் காரணம் என்றார்.

இருட்டில் தான் அனைத்து விதமான குற்றங்களும் நடக்கிறது. கரூர் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் நடந்த சம்பவங்களை வைத்து தான் விஜய் இனி இரவு நேரங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது என முடிவு செய்துவிட்டார். நாம் வாய்மொழியாக சொன்னதெல்லாம் தற்போது நேரில் நடப்பதாக எஸ்ஏசி கூறினார்.

“>

 

மேலும் கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் அடங்குவர். அவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பெயரில் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.