சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், இடும்பாவனம் கார்த்தி, தென்னகம் விஷ்ணு ஆகிய ஐந்து பேரின் உடைய வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்தார்கள்.

12 செல்போன்கள்,  விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடைய புத்தகங்கள்  உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தார்கள். மேலும் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அவர்கள் நேரில் ஆஜர் ஆகி விளக்கமும் அளித்து இருந்தார்கள்.  மேலும் youtube-இல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் தெரிவித்திருந்தார்கள்.

இதற்கிடையே youtube-இல் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பதிவேற்றம் செய்த 5 வீடியோக்களை சாட்டை துரைமுருகன் முன்னதாகவே நீக்கியதாக NIA  தரப்பில் தகவல் ஆனது கிடைத்திருக்கிறது. இருப்பினும் நீக்கப்பட்ட வீடியோக்களை NIA  அதிகாரிகளிடம் அவர் ஒப்படைத்து இருக்கிறார். அந்த அடிப்படையில் பெறப்பட்ட 1500 வீடியோக்களையும் கொண்டு NIA  அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.