பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் வடிவேலு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் அவர் நினைவிடத்திற்கு சென்றார் என்று சொல்லப்படுகிறது.

மாமன்னன் படத்திற்கு பின் அமைச்சர் உதயநிதியுடன் வடிவேலு நெருக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வடிவேலு திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.