திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் ஆக இருந்த பொன்முடி அவரின் தொகுதி என்பது திருக்கோவிலூர் தொகுதி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஒரு தொகுதி எம்எல்ஏ இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத சூழல் ஏற்பட்டாலோ உடனடியாக சட்டப்பேரவையின் செயலாளர் தான் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்புவார்.

இந்த காரணத்தினால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். எனவே இந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜயதாரணி விளவங்காடு தொகுதி உறுப்பினராக இருந்தார். அவர் பாஜகவில் சமீபத்தில் சேர்ந்திருந்தார்.

எனவே பாஜகவில் அவர் சேர்ந்து விட்ட காரணத்தால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுவதாக சட்டப் பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த தொகுதியை தொடர்ந்து தற்போது பொன்முடி தொகுதியாக இருந்த திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. அதனை தொடர்ந்து தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கடிதத்தையும் கொடுத்துவிட்டு வந்தனர்.

கடிதம் கொடுத்தபோது சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் உடைய பரிசீலனை இருக்கிறது என செயலாளர் சீனிசவாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிவிட்டார்..

எனவே தமிழ்நாட்டில் இரண்டு எம்எல்ஏ தொகுதிகளுக்கும், சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருக்கோவிலூர் தொகுதி, இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலானது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.