நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 21,446 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது.