உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா அவர்கள் உக்கிரேனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பேசியதாவது “ரஷ்ய படைகளினால் உக்ரைன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டி எழுப்ப அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. எனவே ஜப்பான் சார்பில் அவர்களுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்படுகின்றது. மேலும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் போர் ஒரு வருடத்தை எட்ட இருப்பதால் அன்றைய தினம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி 7 மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.