பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சாலையில் தரிக்கெட்டு ஓடி எதிர் திசையில் வந்த மூன்று வாகனங்கள் மீதும் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினும் மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அதோடு அவர் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.