உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது. அதோடு ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளது. ஆனால் இதனை ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்தப் போரால் ஜெர்மனி நாட்டிற்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பது குறித்து தொழில்துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் ஜெர்மனிக்கு சொந்தமாக எரிவாயு உலையோ அணு ஆற்றல் உலையோ இல்லை. இதனால் ஜெர்மனி எரிவாயுவுக்காக ரஷ்யாவையே நாடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஜெர்மனிக்கு அது பேரிடியாக அமைந்தது. இதனால் ஜெர்மனி 2021 விட 2023 இல் ஆற்றலுக்காக மட்டும் மட்டும் 160 மில்லியன் யூரோக்கள் இழப்பை சந்திக்க நேரிடும்” என தொழில்துறை நிபுணர்கள் கணித்து உள்ளனர்.