ஈரானுடன் கடந்த 38 நாட்களாக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஈரானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்கு போட்டிருந்தாலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் நிதி இழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனால் அதிபயன்பட்ட டொனால்ட் டிரம்ப், ஈரானுக்குப் பலமுறை போர் நிறுத்தத் தூது அனுப்பியும் ஈரான் அதனை ஏற்க மறுத்து வருகிறது. இந்தப் போர்ச் சூழலில் அமெரிக்கா தனது பலத்தை இழந்து வருவதை உணர்ந்த டிரம்ப், தற்போது ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம் என்றும், அதன் மீது போர் தொடுப்போம் என்றும் டிரம்ப் மிரட்டி வந்த நிலையில், தற்போது அந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

கனடாவின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் 200 ஆண்டுகால வரலாற்றை மதிக்கப் போவதாகவும், அந்நாட்டின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதால் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போரில் சிக்கியுள்ள நிலையில், மற்றொரு போரைத் தவிர்க்க டிரம்ப் எடுத்த இந்த முடிவு உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.