சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் பிரம்மாண்டமான வெள்ளை நிற மலைப்பாம்பைத் தனது தோளில் சுமந்து கொண்டு எவ்வித அச்சமுமின்றி வலம் வருகிறார். மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவை ஒருவரைச் சுருட்டினால் எலும்புகளைச் சிதைத்து உயிரைப் பறிக்கக்கூடிய வல்லமை கொண்டவை. ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர், அந்த ராட்சத பாம்பை ஒரு செல்லப் பிராணி போலக் கையாளுவது காண்போரை உறைய வைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பகிர்ந்த நபர், தனக்கு 30 ஆண்டுகாலமாகப் பாம்புகளைக் கையாண்ட அனுபவம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாம்புகளின் சிறு அசைவைக் கூடத் தன்னால் கணிக்க முடியும் என்பதால் தான் இவ்வளவு தைரியமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தப் பாம்பின் பிரம்மாண்டமான உருவமும், அதன் அபூர்வமான வெள்ளை நிறமும் இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
