சோஷியல் மீடியாவில் எப்போதுமே எதாவது ஒரு வினோதமான விஷயம் வைரலாகிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் இணையதளத்தையே அதிர வைத்துள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களுக்குப் பின்னால் வேடிக்கையான கவிதைகளையோ அல்லது தத்துவங்களையோ பார்ப்பது வழக்கம் தான். ஆனால், இந்த ஆட்டோவில் இருந்த ஸ்லோகன், பார்ப்பவர்களை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்து, பின் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளது.

​இன்ஸ்டாகிராமில் ‘sayanika_official1712’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. ஆட்டோவின் பின்னால் இருந்த அந்த வினோத வாசகத்தைப் பார்த்து நெட்டிசன்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். சிலர் இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்று கமெண்ட் செய்ய, பலரோ இதை ஒரு ஜாலியான விஷயமாக எடுத்துக்கொண்டு நக்கல் அடித்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த ‘ஆட்டோ தத்துவம்’ இப்போது ட்ரெண்டிங்கில் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.