இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலரும் தங்களது உயிரையே பணயம் வைத்து விசித்திரமான காரியங்களைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சாதாரண பைக்கில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மொத்தம் ஆறு பேர் ஒன்றாகப் பயணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Shivam Rajak (@shivam_rajak_sistam)

அதில் பைக் ஓட்டும் நபர் சீட்டில் அமராமல் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு வாகனத்தை அதிவேகமாகச் சாலையில் ஓட்டிச் செல்கிறார்.

ஒரு பக்கம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் இன்றி இவ்வளவு ஆபத்தான முறையில் பொது சாலையில் சர்க்கஸ் செய்வது போன்ற இந்தச் செயல் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.