மக்களின் வீடுகளுக்குத் தொடர்ந்து உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் டெலிவரிப் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர் ஒருவர், தனது கடுமையான உழைப்பால் சேர்த்த சேமிப்பைக் கொண்டு தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சிறு தொகையில் இருந்து சிறிதளது பணத்தைச் சேமித்து வந்த அவர், தனது தாய்க்கும் பாட்டிக்கும் பயன்படும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை வாங்கியுள்ளார். ஒரேடியாக பெரிய தொகையைச் செலவிடாமல், நீண்ட நாட்களாகச் சேர்த்து வைத்த அந்தச் சேமிப்புத் தொகை முழுமையடைந்ததும் அவர் அந்தப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

புதிய தொலைக்காட்சியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அந்த இளைஞர், அதனைத் தனது குடும்பத்தினரிடம் காட்டியபோது, “நான் ஸ்விகி நிறுவனத்தில் வேலை செய்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raw India (@raw.indiaa)

கடுமையான சாலைப் போக்குவரத்து மற்றும் பருவநிலை மாற்றங்களையும் கடந்து அவர் தினமும் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் இந்தப் பரிசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்தப் புதிய பொருளைக் கண்டதும் அவரது தாயும் பாட்டியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

‘ராவ் இந்தியா’ என்னும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான காணொளி, இணையத்தில் வெளியான மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து வைரலானது. பணத்தை விடவும் உழைப்பின் மூலமும் அன்பின் மூலமும் கிடைக்கும் மகிழ்ச்சியே உண்மையானது என்பதை உணர்த்தும் வகையிலான இந்தச் செய்தி, சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அந்த இளைஞரின் விடாமுயற்சிக்கு ஏராளமான பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.