இன்றைய காலக்கட்டத்தில் ஹோம்வொர்க் டார்ச்சர் தாங்காமல் குழந்தைகள் செய்யும் குறும்புகள் பல நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும். அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு குட்டிப் பெண்ணின் வீடியோ, நெட்டிசன்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளது.
பள்ளி முடிந்து சீருடையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, வழியில் இருந்த ஒரு சாக்கடை கால்வாயின் அருகே நிற்கிறாள். அக்கம்பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டவள், சட்டென்று தனது பேக்கில் இருந்து புத்தகத்தை எடுத்து அந்தச் சாக்கடைக்குள் போட்டு விடுகிறாள்.
Problem Solved in 1 min 😂 pic.twitter.com/sAnrMxd81K
— The Adventurous Soul (@TAdventurousoul) February 18, 2026
புத்தகம் சரியாக உள்ளே செல்லாததால், அதை லாவகமாக மடித்து உள்ளே தள்ளிவிட்டு, ‘அப்பாடா.. ஒரு வழியா முடிஞ்சது’ என்பது போல துள்ளிக்குதித்து ஓடுகிறாள்.
“புத்தகம் இல்லை என்றால் ஹோம்வொர்க் செய்யத் தேவையில்லை” என்ற சிறுமியின் இந்த கில்லாடித்தனமான ஐடியாவைப் பார்த்த நெட்டிசன்கள், ‘இதுதான் மாடர்ன் பிராப்ளத்துக்கு மாடர்ன் சொல்யூஷன்’ என்றும், ‘யாராவது கேட்டால் திருடு போய்விட்டது எனச் சொல்லப் போகிறாள்’ என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
