சமூக வலைதளங்களில் தினமும் பல திருமண வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், ஒவ்வொரு இந்தியரையும் நெஞ்சார பெருமையடையச் செய்யும் விதமாக, இங்கிலாந்தில் நடந்த ஒரு பிரிட்டிஷ் திருமணத்தில் வெள்ளையின சமையல்காரர் ஒருவர் சுடச்சுட தோசை சுட்டும், பானி பூரி பரிமாறியும் அசத்தியுள்ள சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘@pappu_dosa’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், வெளிநாட்டு விருந்தினர்களும் பெண்களும் இந்த இந்திய சுவையை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து உண்பது பார்ப்போரைக் கவர்ந்துள்ளது; இந்தியத் திருமணங்களில் இத்தாலிய அல்லது சீன உணவுக் கடைகளைப் பார்ப்பது சகஜம் என்றாலும், பிரிட்டனில் நம்ம ஊரு தோசை மாவை விட வேகமாக இந்தத் தென்னிந்திய சுவை பரவி வருவதைக் கண்டு நெகிழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
“>
இந்தியப் பயனர்கள், “இது என்ன மாதிரியான ‘யூனோ ரிவர்ஸ்’ காலனித்துவம்” என்றும், “இப்போது தோசைக்குக் கூட பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வந்துவிட்டது” என்றும் சோசியல் மீடியாவில் வேடிக்கையாகவும் ஆச்சரியத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
