நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் 292 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்க இருக்கிறார். அதன்படி வருகின்ற ஜூன் 8-ம் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க கோர இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.
