அகமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை, விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக, விபத்து நடந்த இடத்தின் டிரோன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்து, அதற்கான பல்வேறு காரணங்களை ஆராய்ந்துள்ளனர். விபத்து நேரத்தில் விமானம் தனது அதிகபட்ச வேகமான 180 நாட்களைச் சென்றவுடன், எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டு சுவிட்சுகள் அணைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த இரண்டு சுவிட்சுகளும் “ரன்” நிலையில் இருந்து “கட்-ஆஃப்” நிலைக்கு மாற்றப்பட்டன. மீண்டும் சுவிட்சுகளை இயக்க முயற்சி செய்தபோதும், விமானம் உந்துதலை பெறுவதற்குள் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
அதேவேளை, விமானத்தின் காக்பிட் குரல் பதிவு ஆய்வு செய்ததில், ஒரு விமானி சுவிட்சை அணைத்ததா அல்லது அது தவறுதலாக நடந்ததா என்பது குறித்து குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதில், “நீ சுவிட்சை ஏன் ஆஃப் செய்தாய்?” என ஒருவர் கேட்க, மற்ற விமானி “நான் செய்யல” என்று பதிலளித்த குரல் பதிவு எழுச்சியைக் கிளப்பியுள்ளது.
மேலும், போயிங் 737-8 வகை விமானத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாகவே, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிறுவனம் (FAA) டிசம்பர் 17, 2018ம் ஆண்டு வெளியிட்ட எச்சரிக்கையும் இப்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. அதில், போயிங் 737 விமானங்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் தவறாக பூட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இது பாதுகாப்பு ரீதியாக மோசமானது எனவும் தெரிவித்திருந்தது.
இந்த தகவல்களின் அடிப்படையில், தற்போது போயிங் நிறுவனத்தின் பொறுப்பையும், ஏர் இந்தியா செயல்முறைகளையும் விசாரிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ள நிலையில் முழுமையான பதில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
