சோசியல் மீடியாவில் பல வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதற்காக சில ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அந்த வகையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இரண்டு வாலிபர்கள் பாதையை பார்க்காமல் பின்னால் திரும்பி வீடியோ எடுக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரும் வீடியோவை திரும்பி பார்ப்பதால் சாலையில் இருந்து ஒதுங்கி மோட்டார் சைக்கிள் பள்ளத்தை நோக்கி செல்கிறது.

சில நொடிகளில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழப்பதை அறிந்த வாலிபர் சுதாரித்துக் கொண்டு சாலையை நோக்கி வாகனத்தை இயக்க முயற்சி செய்கிறார். அதற்குள் இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

ரீல்ஸ் என்ற பெயரில் இன்றைய இளைய தலைமுறையினர் ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். வாகனங்களில் சொல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாகிறது.