இணையத்தில் வேகமாக பரவும் வீடியோவில் ஒரு கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சிறிய பறவை குஞ்சை பாம்பு ஒன்று தவழ்ந்து வந்து தாக்கத் தயார் நிலையில் வந்தது. இவ்வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் டிஸ்ஸோம் எம்டி ஷேர் செய்துள்ளார்.

சிறிய குஞ்சை பாம்பு  தாக்கத் தயார் நிலையில் இருந்த வேளையில்,  தாய் பறவை பாம்பின் தலையை தனது கூரிய அலகால் பிடித்து தூக்கி வீசிய காட்சி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது AI வீடியோ எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.