தமிழக அரசியலில் தற்பொழுது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்து மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்த அசுரத்தனமான வளர்ச்சி மற்றும் மக்கள் அளித்துள்ள பேராதரவு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் தற்பொழுது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. புதிய இயக்கம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே இத்தனை லட்சம் மக்கள் தன்னிச்சையாக வந்து இணைந்திருப்பது அண்ணாமலை முகாமிற்குப் பலமடங்கு உத்வேகத்தைத் தந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/gSstBA1IYJ இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது… pic.twitter.com/nzB5URPZHV
— K.Annamalai (@annamalai_k) June 6, 2026
தங்கள் இயக்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொரு பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் அண்ணாமலை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மக்களின் இந்த பேராதரவு தனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியையும், அதைவிட மிகப்பொறுப்பான ஒரு கடமையையும் தன் தோள்களில் ஏற்றியுள்ளதாக அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். உறுப்பினர் சேர்க்கையிலேயே தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் அண்ணாமலையின் இயக்கம் காட்டியுள்ள இந்த அசுர வேகம், தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது மெகா புயலைக் கிளப்பியுள்ளது.
