பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரான தாடி பாலாஜி, தான் இணைந்து பணியாற்றி வந்த ‘லட்சிய ஜனநாயக கட்சி’யின் அனைத்து பொறுப்புகள் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முழுமையாக விலகுவதாகத் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) விலகி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியில், நடிகர் தாடி பாலாஜி இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், “நான் லட்சிய ஜனநாயக கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் கட்சியிலிருந்து முழுமையாக விலகுகிறேன்” என்று அவர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே ஒரு முக்கிய பிரபலம் அதிரடி முடிவை எடுத்து வெளியேறியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
