தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டாளர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உட்பட 23 மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீரிழிவு மருந்தான Gliclazide ER மற்றும் Metformin Hydrochloride  மாத்திரைகளின் ஒரு மாத்திரையின் விலையை 10.03 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

இதனைப் போலவே டெல்மிசார்டன், குளோர்தாலிடோன் மற்றும் சில்னிடிபைன்  ஆகிய மாத்திரைகள் ஒன்றின் சில்லறை விலை 13.17 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. வலி நிவாரணி மருந்தான ட்ரிப்சின், ப்ரோமோலைன், ரூடோசைட் ட்ரைஹைட்ரேட் மற்றும் டிக்லோ ஃபெனாக் சோடியம் மாத்திரைகளின் சில்லறை விலை 20.51 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.