2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான களம் தற்போதைய தமிழக அரசியலில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களை,  தேர்தல் பிரச்சாரங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில்,  அதிமுக புதிய கூட்டணி அமைக்கும் பணியை தொடங்கிவிட்டது.

தமிழக பாஜகவோ அதிமுகாவுடனான மோதலை அடுத்து, தனித்து போட்டியிட வேண்டும் என்ற முடிவோடு அதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டொமக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி,தமிழகத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் DMK  48% வாக்குகளுடன் 40 இடங்களை வெல்லும் எனவும், அ.தி.மு.க: 23% வாக்குகளுடன் எந்த இடமும் கிடைக்காமலும்,  BJP:  வெறும் 7% வாக்குகளுடன் எந்த இடமும் கிடைக்காமலும், மற்றவை: 22% வாக்குகளுடன் எந்த இடமும் கிடைக்காமல் போகும் என முடிவுகளை வெளியிட்டுள்ளது.