தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா என்றும் சவால் விடுத்துள்ளார்.