அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால். செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20,000 கிலோ தங்கம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது