வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ ஏவி விசாரணை நடத்த சொல்லுங்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன் இந்த தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ அதே அளவு தொகையை காங்கிரஸ் மகாலட்சுமி திட்டம், முதல் வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டம் மூலமாக மக்களை செல்வந்தர்களாக மாற்றுவோம். பாஜக 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியது. நாங்கள் கோடிக்கணக்கானவர்களை லட்சாதிபதிகளாக உருவாக்குவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.