பனி படர்ந்த அண்டார்டிக் பகுதியில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனை மாநாட்டில் முறைப்படி தெரிவிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு 26ஆம் தேதி கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கும்.

இந்த இரண்டு கூட்டங்களும் கொச்சியில் இம்மாதம் 20 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. தற்போது இந்தியா அண்டார்டிகாவில் மைத்ரி மற்றும் பார்தி ஆகிய இரண்டு ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது.