சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் 5வது பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரோடு கள்ளத்தொடர்பு இருந்தது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது.

6 மாதங்களுக்கு முன்பாக தங்களுடைய குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல குடும்ப நடத்தி வந்தனர்.  எங்கள் குடும்பத்தினர் என்னையும் விஜய்யையும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் சாகப்போகிறோம் என்று தன்னுடைய தோழிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு மேரி மற்றும் விஜய் தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.