சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு ஒரு முறை சட்ட நடைமுறையின் படி நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த முறை நீட்டிக்கப்பட்ட அவரது 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில்,

சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன் அமர்வில் இன்று புழல் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜினுடைய காவலை வரும் 20ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு நீட்டித்து,

நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 8ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.