கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன் ஒன்று, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-இல் அதன் உரிமையாளரிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ள வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு பார்சல் கைக்கு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயனர், இது குறித்த விவரங்களை இணையத்தில் பகிர, அது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தொழில்நுட்ப உலகம் 3ஜி-யிலிருந்து 5ஜி  மற்றும் எஐ காலத்திற்கு மாறிய பின்பும், பழைய காலத்து போன் இப்போது வந்து சேர்ந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் ஆன்லைன் டெலிவரி சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. 2010-களில் நோக்கியா சந்தையில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் ஆர்டர் செய்யப்பட்ட அந்தப் போன், தற்போது ஒரு பழங்காலப் பொருளாகவே  பார்க்கப்படுகிறது.

மேலும் ‘தாமதமானாலும் தரமான டெலிவரி’ என சிலர் இதை கிண்டல் செய்தாலும், ஒரு பார்சல் வந்து சேர இத்தனை தசாப்தங்கள் ஆகுமா என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இந்தச் செய்தி ஏபிபி நியூஸ் போன்ற முக்கிய ஊடகங்கள் வாயிலாக வைரலாகி வருகிறது.