தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஒரு ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் (பாதி தொகை) ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர் குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

​அதுமட்டுமின்றி, ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பயனாளிகளின் 10% பங்களிப்போடு ஒரு தனி ஓய்வூதிய நிதியம் உருவாக்கப்படும். அந்த நிதியத்திற்குத் தேவைப்படும் மீதி கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம். 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம் அரசு ஊழியர்களின் இதயத்தில் முதல்வர் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.