தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்தது. ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஒய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் அவர்களுக்கு பென்ஷன் ஆக கிடைக்கும். மேலும் இதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்குவதற்காக பணியாளர்களின் சம்பளத்தில் பத்து சதவீதம் பங்களிப்பு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
