கூகுள் பே மூலம் சுமார் 12000 கோடி பணத்தை ஊழல் செய்ததற்காக யூடியூபில் உள்ள சுமார் 20 லட்சம் வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் youtube மூலம் ஏமாற்றும் கும்பல்களை எளிமையாக அகற்ற முடிந்ததாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையில் youtube-க்கு கூகுள் வகுத்த கொள்கைகளை மீறிய குற்றத்துக்காக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட youtube வீடியோக்களை அகற்றி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அந்த நிறுவனம் ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையில் கொள்கைகளை மீறியதற்காக இந்தியாவில் அதன் தளத்திலிருந்து 1.9 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.