சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் மீது மோதியது.

இந்த விதத்தில் பூவரசனின் தாய் கிருஷ்ணவேணி, உறவினர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.