திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசாணி பாளையம் கிராமத்தில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் வயரில் பட்டு கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.