கோவை நோக்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயபாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குமார் இடிப்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.