திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கேசவன் நகரில் சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதற்கு சுரேந்தரின் நண்பர் முரளி என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேந்தர் மற்றும் முரளி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்