ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் தங்களின் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்புவது சட்டப்படியான உரிமையாகும். ஆனால், தனது கிராமத்தின் வளர்ச்சி குறித்து நியாயமாகக் கேட்ட ஒரு சிறுவனை, பஞ்சாயத்துத் தலைவரே இரக்கமின்றி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடந்த இந்த அராஜகச் சம்பவம் இணையத்தில் பரவி கடுமையான விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள லாரியா என்ற கிராமத்துப் பஞ்சாயத்தில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், தங்களது பஞ்சாயத்தில் இதுவரை என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தை அங்கிருந்த பஞ்சாயத்துத் தலைவரிடம் கேட்டுள்ளார்.

தன்னிடம் ஒரு சிறுவன் துணிச்சலாகக் கேள்வி கேட்பதா என்ற அதிகாரத் திமிரிலும் கோபத்திலும் ஆத்திரமடைந்த அந்தப் பஞ்சாயத்துத் தலைவர், சிறுவனுக்குப் பதில் சொல்வதை விடுத்து, அவனைப் பிடித்து மிகக் கொடூரமான முறையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே அச்சிறுவனை தாக்கிய அராஜகச் செயலை அங்கிருந்தவர்களின் மொபைல் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனக் குரல்களை மிகத் தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.

“>

“மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படிச் சட்டத்தைக் கையில் எடுத்து ஒரு சிறுவனை மிருகத்தனமாகத் தாக்கினால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு என்ன?” என்று இணையவாசிகள் பலரும் பீகார் மாநில போலீசாரிடம் இந்தத் தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உடனடியாக வலியுறுத்தி வருகின்றனர்.